Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! - பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!
நாமக்கலில் 40 வயதை தாண்டியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், பெற்றோரை கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 16, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரில் உள்ள மல்லித்தெருவில் வசித்து வரும் தம்பதி சந்திரசேகரன் (வயது 70)-வத்சலா (வயது 65). இத்தம்பதிக்கு விமல் (வயது 40) என்ற மகன் உள்ளார். இவர் ராசிபுரத்தில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். A Father Kills Childrens: 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை – தந்தை தலைமறைவு..!
இந்நிலையில், 40 வயது ஆன போதும் தனக்கு திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த விமல், வீட்டில் இருக்கும்போது தனது தாய் மற்றும் தந்தைக்கு குளிர்பானத்தில் விஷத்தை (Poison) கலந்து குடிக்க கொடுத்துள்ளார். இதனை குடித்த இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து, விமலும் விஷம் கலந்துள்ள குளிர்பானத்தை குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து, மயக்க நிலையில் விமல் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த அவசர ஊர்தி ஊழியர்கள், மயங்கி கிடந்த அவர்கள் 3 பேரையும் மீட்டு ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக இவர்கள் மூவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

