Defence Minister Rajnath Singh in INS Vikrant (Photo Credit: Twitter)

மார்ச் 07, ஐஎன்எஸ் விக்ராந்த்: கோவாவில் (Goa) உள்ள கடற்கரையில், இந்திய கடற்படை (Navy) சார்பில் உள்நாட்டு விமானம்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் (INS Vikrant) விக்ராந்த்தில் வைத்து கடற்படை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh), அங்கிருந்த வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

அந்த உரையில், "இந்தியாவுக்கு (India) எதிரான எதிர்கால மோதல்கள் என்பவை கணிக்க இயலாத வகையில் இருக்கும். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதியில், இந்திய கடற்கரையில் முழுநேர கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்கால சவால்களை திறம்பட எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். Alcoholic Died: போதையில் பாம்பை பிடித்து ரகளை செய்த இளைஞர்.. பாம்பு தீண்டி பரிதாப மரணம்.!

அந்த அச்சுறுத்தலுக்கு ஏற்ப நமது ஆயுதங்களை எதிர்கால திறனுடன் மேம்படுத்த வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கடற்கரையோரம், சீனா - பாகிஸ்தான் (China & Pakistan) எல்லைப்பகுதியில் நாம் விழிப்புடனும், பாதுகாப்புடனும் செய்லபட வேண்டும். நமது இந்திய மக்கள், அவர்களின் பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க எல்லையில் பாதுகாப்பு அவசியம்.

பிரதமர் மோடியின் (Prime Minister Narendra Modi) தலைமையிலான இந்தியா திறம்பட செயல்படுகிறது. இந்திய-சீன எல்லையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இரண்டு பெரிய மோதல்களும் நடந்துள்ளன. ஜம்மு காஷ்மீர், கேரளா போன்ற மாநிலத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான தந்திர செயல்பாடுகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள வேண்டும்" என கூறினார்.