Firecrackers Explodes: திருவிழா பட்டாசு உயிர் பறித்த சோகம்; சிறுவன் உட்பட 2 பேர் பரிதாப பலி.!

சாமி ஊர்வலத்தின் போது வெடிக்க வைத்திருந்த பட்டாசில் தீப்பொறிகளில் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது.

Firecrackers Explodes: திருவிழா பட்டாசு உயிர் பறித்த சோகம்; சிறுவன் உட்பட 2 பேர் பரிதாப பலி.!
Fire Explosion | Death File Pic (Photo Credit: Pixabay)

மே 24, மொரக்பூர் (Dharmapuri News): தர்மபுரி மாவட்டம் மொரக்பூர், டி.பள்ளிப்பட்டு கிராமத்தில் மரியம்ம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதற்காக டாடா ஏசி வாகனத்தில் சாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், பட்டாசு உட்பட வெடிபொருட்களும் ஊர்வலத்தில் வெடிப்பதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடித்தபோது, அது அருகே இருந்த மின்கம்பத்தில் வெடித்து தீப்பொறிகள் பிற பட்டாசுகள் மீது பட்டுள்ளது. Rajinikanth About Sarath Babu: “கோபமே வராத நல்ல மனிதர் அவர்” – சரத் பாபு குறித்து கனத்த இதயத்துடன் மனம்திறந்த ரஜினிகாந்த்.!

இதனால் டாடா ஏஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் ராகவேந்திரன், திருவிழாவை வேடிக்கை பார்த்த அசோகனின் மகன் சிறுவன் ஆகாஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக மொரக்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 24, 2023 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).