Rajinikanth Sarath Babu (Photo Credit: Twitter)

மே 23, சென்னை (Cinema News): தெலுங்கு (Telugu Cinema Industry) திரையுலகில் அறிமுகமாகி தனது திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சரத் பாபு (Sarath Babu), தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவர் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியை தந்தது. இன்று வரை ரஜினிகாந்துக்காகவும்-சரத் பாபுவுக்காகவும் அப்படத்தை பலரும் பார்த்து வருகின்றனர். UPSC Results: யு.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வெளியீடு; இஷிதா, கரிமா, உமா ஹாரதி முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை.! 

Actor Sarathbabu (Photo Credit: Twitter)

58 வயதில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத் பாபு, ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள திநகர் இல்லத்திற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டு, இன்று மதியம் அவரின் இறுதி ஊர்வலம் நிறைவடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை தி.நகர் சரத் பாபு இல்லத்திற்கு நேரில் சென்று, அவரின் குடும்பத்தினரிடையே ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த், "அவர் நல்ல மனிதர். அவரிடம் கோபம் வந்து நான் பார்த்தது இல்லை. அவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. எனது நெருங்கிய நண்பர். அவரின் மறைவு என்னை மனதளவில் பாதித்துவிட்டது" என செய்தியாளர்களிடம் கூறினார்.