வானிலை: சுட்டெரிக்கப்போகும் வெயில்., தவிக்கப்போகும் தமிழகம்.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலை அதிகமாக பதிவாகலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 08, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான - அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தி பகுதியில் 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பரமத்தியில் 16 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒருசில மாவட்டங்களில் அதிக வெப்பநிலையும் நிலவி இருக்கிறது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்ககையில், 08-02-2025 இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். Vellore: சீட்டு பணத்தை கேட்ட இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
09-02-2025 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 10-02-2025 முதல் 14-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (08-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (09-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

