
பிப்ரவரி 08, வேலூர் (Vellore News): காஞ்சிபுரம் (Kanchipuram) மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் (Chinna Kanchipuram) பகுதியில் வசித்து வரும் 30 வயதுடைய இளம்பெண், தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்பனை செய்து, திருவண்ணாமலை (Tiruannamalai) மாவட்டம், செய்யாறு பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த அல்தாபி தாசின் என்பவரிடம் ரூ.15 இலட்சம் கொடுத்து சீட்டு கட்டி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்கள் என ரூ.1.75 கோடிக்கு மேல் சீட்டு கட்டியுள்ளார்.
வேலூருக்கு வந்து பணம் வாங்க அறிவுறுத்தல்:
பணத்தை வாங்கிக்கொண்ட நிறுவனத்தினரும் இளம்பெண் சேர்ந்துவிட்ட நபர்களுக்கு ரூ.40 இலட்சத்தை கொடுத்துவிட்ட நிலையில், எஞ்சிய தொகையை வழங்கவில்லை. இதனால் பணத்தை அல்தாபிடம் பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று தொடர்புகொண்ட பெண்ணை, அல்தாபி வேலூருக்கு வந்து பணம் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
கொலை செய்வதாக மிரட்டல்:
பணத்தை வாங்க வேலூர் வந்த பெண்ணை, பொதுவான இடத்தில் வைத்து பணம் கொடுத்தால் பிரச்சனை வரும் என கூறிய அல்தாபி, நூதனமாக பேசி விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண்ணும், அவரின் தாயாரும் செண்ரதுள்ளனர். அங்கு ஐவர் கும்பல் பெண்ணை மிரட்டி பணம் கொடுக்க இயலாது, பணம் தொடர்ந்து கேட்டால் கொலை செய்வோம் எனவும் தெரிவித்து இருக்கின்றனர்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்:
ஆயுதங்களை காண்பித்து மிரட்டி இளம்பெண்ணின் தாயை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல், இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து வாயில் ஊற்றிவிட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த செயலை மேற்கொண்ட அல்தாபி தாஸின், மகேஷ், ராஜ்குமார், உன்னை சீரழித்து வீடியோ எடுத்து வைத்துள்ளோம். எங்களைப்பற்றி வெளியே சொன்னால், பணம் கேட்டால் வீடியோ வெளியாகும் என மிரட்டி இருக்கின்றனர்.
விசாரணை தொடங்கியது:
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த மாதம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் 3 பெண்கள் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். விரைவில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.