வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

வறண்ட வானிலை நிலவி வரும் காரணத்தால், தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

பிப்ரவரி 09, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில்‌ மிதமான - அடர்ந்த பனிமூட்டம்‌ நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 34.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திமுக நிர்வாகி மனைவி கொலை விவகாரத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் பின்னணி.. பாலியல் தொல்லை, வாய் பேச்சால் பறிபோன உயிர்.! 

இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், 09-02-2025 மற்றும்‌ 10-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 11-02-2025 முதல்‌ 15-02-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

சென்னை வானிலை (Chennai Weather Today) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):

இன்று (09-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (10-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌

பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Feb 09, 2025 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).