Tirupathur Murder Case (Photo Credit: @veereshwer68359 X)

பிப்ரவரி 09, கோ. புளியம்பட்டி (Tirupattur News): திருப்பத்தூர் (Tirupathur) மாவட்டத்தில் உள்ள மட்றப்பள்ளி ஊராட்சி, கந்திலி ஒன்றியம், கோ. புளியம்பட்டி பகுதியில் வசிப்பவர் திருப்பதி (வயது 50), இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கிறார். திருப்பதியின் மனைவி வசந்தா. சம்பவத்தன்று தம்பதிகள் இருவரும் வீட்டில் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய திருப்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த வசந்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கொடூரமாக நடைபெற்ற கொலை:

தம்பதிகளை கொலை செய்யும் எண்ணத்துடன் தாக்கியது யார்? எதற்காக வசந்தா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்? என தனிப்படை அமைத்து நடந்த விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது, அரசியல் கட்சி பிரமுகரான திருப்பதி நிலங்களை விற்பனை செய்யும் பிரமுகராகவும், உள்ளூரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தலையிட்டு இருக்கிறார். இதனால் முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என விசாரணை நடந்தாலும் முன்னேற்றம் இல்லை. Vellore: சீட்டு பணத்தை கேட்ட இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்.! 

நெருங்கிய உறவினர் மகன் கைது:

சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், பயங்கர ஆயுதத்துடன் திருப்பதியின் வீட்டில் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது அம்பலமானது. கொலையாளிகள் ஓசூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். தொடர்ந்து, இருவரையும் தேடிய காவல்துறையினர், அவர்களை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல் அம்பலமானது. கொலையான வசந்தாவின் சகோதரி சாந்தியின் மகன் ரேணு மற்றும் அவரின் கூட்டாளி கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக பிரமுகரின் அதிர்ச்சி செயல்:

50 வயதாகும் திருப்பதி பெண்களிடம் பேசும்போது, தனது ஆசைக்கு அவர்கள் இணங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசி வந்துள்ளார். இவ்வாறான செயல் வசந்தாவின் தங்கையான சாந்தியிடமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. மேலும், சாந்தியின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருப்பதால், சாந்தியிடம் உனது கணவனால் என முடியும்? எனது ஆசைக்கு இணங்கு என பாலியல் தொல்லை கொடுத்து, அவரது கணவரையும் மாற்றுத்திறனாளி என கேலி பேசி வந்துள்ளார். இந்த விஷயம் ரேணுவுக்கு தெரியவந்துள்ளது. 8-Year-Old Girl Harassed: மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குவியும் புகார்.. அதிர்ச்சியில் திருச்சி மக்கள்.! 

பெரியப்பாவை போட்டுத்தள்ளிய மகன்:

திருப்பதி ஊரில் முக்கியஸ்தர் என்பதால், சாந்தியால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும், பாலியல் தொல்லையில் இருந்து தப்பித்து வந்துள்ளார். எப்படியேனும் சாந்தியை தன்வசப்படுத்தி வேண்டும் என எண்ணிய திருப்பதி, தொடர்ந்து தனது செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளார். இதனால் ஓசூரில் இருந்து சொந்த ஊர் வந்த மகன் ரேணுவிடம், அவரது பெரியப்பா திருப்பதி செய்யும் தொல்லைகளை எடுத்துரைத்துள்ளார். இதனால் ஆவேசமான ரேணு, நண்பன் கெவினுடன் சேர்ந்து திருப்பதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தாய்ப்பாசம் கொலையில் முடிந்தது:

சம்பவத்தன்று ரேணு, கெவின் திட்டப்படி, இருவரும் திருப்பதி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு பெரியப்பாவுக்கு பாடம் எடுக்க தயாரான ரேணு, திருப்பதியை சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த வசந்தாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ரேணு ஏற்கனவே நண்பனை இழிவாக பேசிய நபரை கெவினுடன் கொலை செய்து சிறைக்கு சென்றுள்ளார். நட்புக்காக அன்று அரிவாளை எடுத்த ரேணு, தற்போது தாயின் மானத்திற்காக பெரியப்பாவை போட்டுத்தள்ளி இருக்கிறார்.