வானிலை: தமிழகத்தில் வறண்ட வானிலைக்கே வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

பிப். 11 மற்றும்‌ 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வானிலை தொடர்பான தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து படிக்கவும்.

வானிலை: தமிழகத்தில் வறண்ட வானிலைக்கே வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

பிப்ரவரி 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில்‌ லேசான பனிமூட்டம்‌ நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. அதிகபட்சமாக வெப்பநிலை ஈரோடில் 34.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. Salem Accident: அரசுப்பேருந்து பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து பயங்கர விபத்து; பள்ளி குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம்.! 

இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், 11-02-2025 மற்றும்‌ 12-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 13-02-2025 முதல்‌ 17-02-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

சென்னை (Chennai Weather Today) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):

இன்று (11-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (12-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).