Salem Attur Bus Accident | Visuals from Spot (Photo Credit: @airnews_Chennai X)

பிப்ரவரி 12, ஆத்தூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து, பைத்தூர் தளவாய்பட்டி கிராமம் நோக்கி இன்று காலை அரசுப்பேருந்து பயணம் செய்தது. பின் மீண்டும் சுமார் 8 மணியளவில், பேருந்து ஆத்தூர் நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் காலை நேரம் என்பதால், பைத்தூர் மற்றும் தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர்கள் 7 பேர் பயணம் செய்தனர். இவர்களுடன் பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் இருந்தனர். இதனிடையே, பேருந்து மலைப்பாங்கான பகுதியில் வரும்போது, கல்லுக்கட்டு பகுதியில் பிரேக் பழுதாகியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - நீதிமன்றம் அனுமதி.! 

மாணவ - மாணவிகள் உட்பட 7 பேர் காயம்:

இதனால் சாலையில் இறங்கிய வேகத்தில் அதனை கட்டுப்படுத்த இயலாமல் ஓட்டுநர் தவிக்க, ஒருகட்டத்தில் பேருந்து பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ-மாணவியர்கள், ஓட்டுனர்கள் என அனைவரும் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் செல்வராஜிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அரசுப்பேருந்து விபத்தில் சிக்கிய காணொளி:

விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், தான் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இருப்பதால், நிர்வாகிகளை காயமடைந்தோருக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் தகவல் தெரிவிப்பு: