Trichy Family Suicide (Photo Credit: @MalaimurasuTv X)

மே 14, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவர், ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி விக்டோரியா, ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதிக்கு ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இன்று (மே 14) காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 9-Month-Old Baby Dies: ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.. சோக சம்பவம்.!!

4 பேர் சடலமாக மீட்பு:

உடனே, இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். மற்றொரு அறையில் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனையடுத்து, 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:

பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மிகவும் மனமுடைந்த அவர், இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர், தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.