Baby (Photo Credit: Pixabay)

மே 13, (Dharmapuri News): தருமபுரி மாவட்டத்தில் உள்ள முத்தம்பள்ளியில் வசித்து வருபவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று குடும்பத்துடன் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது சேலத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய நிலையில் ராஜதுரையும், அவரது மனைவியும் குழந்தைகளுடன் நடத்துனரின் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

கதவு வழியாக சாலையில் விழுந்த குழந்தை :

இதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் ராஜதுரையின் தோளில் இருந்த 9 மாத குழந்தை தரணிஷ் பேருந்தின் முன் பக்க கதவு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கண்டு பதறிய ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தியுள்ளார். Pollachi Sexual Abuse Case: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு..!

குழந்தை மரணம் :

படுகாயமடைந்த குழந்தை பெற்றோரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.