Family Suicide Attempt: ஆன்லைன் முதலீட்டு பணமிழப்பு; வாலிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!
விழுப்புரத்தில் வாலிபர் ஒருவர் அதிக கடன் தொல்லையால், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 01, விழுப்புரம் (Vilupuram News): விழுப்புரம் மாவட்டம், தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 30). இவர், தனது மனைவி வாணி மற்றும் 1 வயது குழந்தையுடன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இழந்த விஜயகாந்த், தனது நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அதனையும் ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். இதனால் பெரும் கடன் தொல்லைக்கு ஆளான அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்குச் சென்றுள்ளார். Pregnant Woman Suicide: கணவர் இறந்த துக்கத்தில், 4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! உறவினர்கள் சோகம்..!
அங்கு, அவர தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விஷம் (Poison) சாப்பிட்டு தற்கொலைக்கு (Suicide Attempt) முயன்றுள்ளார். பின்னர், அங்கிருந்து மோட்டார் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் வழியில் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே வந்தபோது, மூன்று பேரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு அருகில் உள்ள கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சட்டை பையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், 'எனது மரணத்திற்கு எம்.எம். குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் காரணம். எனது நண்பரிடம் இருந்து நான் வாங்கிக் கொடுத்த பத்திர ஆவணங்களை பெற்றுக்கொண்டு, பணம் எதுவும் தராமல் ஏமாற்றியதுடன், பத்திரத்தை திரும்பத்தராமல் ரூ. 5 லட்சம் கேட்டு தொல்லை தருகிறார்' என எழுதியிருந்தார். இதுதொடர்பாக, வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 01, 2024 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

