Engineering Student Suicide: ஆன்லைன் சூதாட்டம்; ரூ.3 லட்சம் பணத்தை இழந்து, என்ஜீனியரிங் மாணவர் தற்கொலை..!
சென்னையில் என்ஜீனியரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 3 லட்சம் பணத்தை இழந்து, விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 18, சென்னை (Chennai News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராமையா புகலா (வயது 21) என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் அங்கு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்டத்தில் (Online Gambling) அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். RCB Vs CSK Match Today: பெங்களூரு - சென்னை அணிகள் இன்று மோதல்; சுவாரசியமான ஆட்டத்தில் வெல்ல போவது யார்..?
இதனால், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடனாக வாங்கி, அதனை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதன்காரணமாக, இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், விடுதியில் உள்ள அறைக்கு சென்று, அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், ராமையா புகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
(The above story first appeared on LatestLY on May 18, 2024 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

