RCB Vs CSK Match (Photo Credit: @TATAIPL2024Club X)

மே 18, பெங்களூரு (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (MI Vs LSG) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்களை இழந்து 214 ரன்களை குவித்தது. பின்னர், 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Hardik Pandya Banned: ஐபிஎல் 2025ல், ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை; அடுத்தடுத்த அபராததால் நடவடிக்கை.!

இந்நிலையில், விறுவிறுப்பாக கடைசி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூரு-சென்னை சூப்பர் கிங்ஸ் (RCB Vs CSK) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற்றதை அடுத்து, இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும், இதுவரை 32 முறை மோதியுள்ளன. இதில், சென்னை அணி 21 போட்டிகளிலும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இருப்பினும், இன்று நடைபெறும் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருப்பதால், அங்கு மழைக்கான வாய்ப்பு 80% வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நீங்கள் இலவசமாக நேரலையில் கண்டு ரசிக்கலாம்.