Two Childrens Stoned To Death: கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்; 2 குழந்தைகள் அடித்துக்கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
தர்மபுரியில் கள்ளத்தொடர்பை நிறுத்திய பெண்ணின் 2 குழந்தைகளை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 13, தர்மபுரி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கொல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி பாலகிருஷ்ணன் (வயது 30)-பிரியா (வயது 24). இத்தம்பதிகளுக்கு சஷ்வந்த் (வயது 6), தர்ஷன் (வயது 3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் கட்டிட பொறியாளராக (Civil Engineer) பணிபுரிந்து வந்துள்ளார். A Wild Elephant Collided With A Train: ரயில் மோதி காட்டு யானை படுகாயம்; தண்டவாளத்தை கடக்கும் போது நேர்ந்த விபத்து..!
இந்நிலையில், பாலகிருஷ்ணன் மனைவி பிரியா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் முண்டாசு புறவடையில் உள்ள அவரது மாமனார் வீட்டில், தங்கி இருந்துள்ளார், அப்போது, அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் (Lorry Driver) வெங்கடேஷ் (வயது 27) என்பவருக்கும், பிரியாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்கடேஷ் உடனான கள்ளத்தொடர்பை பிரியா கைவிட்டுள்ளார். இதனால ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த பிரியாவின் இரண்டு மகன்களையும், அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று குழந்தைகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர், வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று அவர் காவல்நிலையத்திற்கு பின்னால் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு தப்பி சென்று, அங்குள்ள மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவருக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

