ஏப்ரல் 13, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், மலம்புழா வனப்பகுதியில் காட்டு யானைகள் இருக்கின்றன. இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தினால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. Woman Arrested In Money Fraud Case: லோன் வாங்கி தருவதாக பண மோசடி செய்த தம்பதி; தலைமறைவாகியுள்ள கணவருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
இச்சூழலில் மலம்புழா அருகே உள்ள கொட்டேக்காடு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அலைந்து, கோவை-பாலக்காடு இடையேயான ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது, ரயில் ஒன்று வந்த நேரத்தில் பெண் யானை ஒன்று குறுக்கே சென்று அடிப்பட்டது. இதில், யானையின் பின்னங்கால்களில் பலத்த காயம் (Wild Elephant Injured) ஏற்பட்டுள்ளது. யானையினால் நடக்க இயலாமல் மங்கலம் அணை பகுதியில் விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்த தகவலறிந்து வந்த வனத்துறையினர் அடிப்பட்டு கிடந்த யானையை பார்வையிட்டனர். இதனையடுத்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் படுகாயம் அடைந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், யானையால் நடக்க இயலாமல், அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், இளநீர், புற்கள் மற்றும் அதற்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது என அங்குள்ள வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.