Explosion At Stone Quarry: கல்குவாரியில் வெடி விபத்து.. வெடித்து சிதறிய உடல்கள்.. வெளியான சிசிடிவி வீடியோ..!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 01, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி (Stone Quarry) செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை தகர்க்க வெடி மருந்துகளை இறக்கி வைக்கும் போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. International Labour Day 2024: "உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா.." சர்வதேச தொழிலாளர் தினம்..!
இதில் வெடி பொருளை இறக்கி வைத்த 3 தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணியில் 30 தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடி அதிர்வால் கடம்பன்குளம் கிராமத்தில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காரியாபட்டி அருகே கோர விபத்து #TamilNews pic.twitter.com/9eIuIIthv3
— Backiya (@backiya28) May 1, 2024
(The above story first appeared on LatestLY on May 01, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

