மே 01, சென்னை (Chennai): தொழிலாளர்களும் தொழிலாளி வர்க்கமும் ஒரு நாட்டின் உந்து சக்தி. அவர்கள்தான் வளர்ச்சியைத் தொடங்குவதற்கான பெரும்பாலான வேலைகளைச் செய்கிறார்கள். தேசமும் மாநிலமும் அதன் உள்கட்டமைப்பு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தால் கட்டமைக்கப்படுகின்றன. எனவே உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த சர்வதேச தொழிலாளர் நாள் (International Labour Day) ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. Dangers of Instant Personal Loan Apps: ஆன்லைன் லோனால் நடக்கும் துயரங்கள்; உஷாராக ஆன்லைன் லோன் வாங்குவது எப்படி?..!

வரலாறு: 1986 ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்கள் போலவே சிக்காகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களை தடுக்க காவல்துறையினர் போராடியதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து சிகாகோவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. அதனையும் எதிர்த்து காவல்துறையினர் அடக்குமுறை செய்தனர். இதனால் பல தொழிலாளர்கள் உயிர் பறிபோனது. தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையிலேயே தொழிலாளர் தினமானது மே ஒன்றாம் தேதி அனுசரிக்கப்படுகிறது.