Woman Doctor Death: மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜர் உயிரை பறித்த சோகம்..!

சென்னையில் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவர் விடுதி அறையில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Doctor Death: மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜர் உயிரை பறித்த சோகம்..!
Death Hand (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Chennai News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூரை சேர்ந்த சரணிதா (வயது 32) என்பவர், பயிற்சி மருத்துவராக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் (Psychiatric Hospital) பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய கணவர் உதயகுமார் என்பவர் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். Rowdy Hacked To Death: பிரபல ரவுடி வெட்டிக்கொலை; மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்..!

மேலும், அயனாவரத்தில் உள்ள சாய் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சரணிதாவுக்கு அவரது கணவர் உதயகுமார் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், சரணிதாவிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த உதயகுமார், தனது மனைவியுடன் பணியாற்றும் கமலா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, கமலா அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, சரணிதா மூச்சு பேச்சு இல்லாமல் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் காவல்துறையினர், சரணிதாவின் அறைக்குள் சென்று பார்த்தபோது, சரணிதா கையில் லேப்டாப் சார்ஜ் கேபிளை பிடித்தவாறு உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர், உயிரிழந்த அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).