Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

மே 27, வில்லிவாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள வில்லிவாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா என்ற உதயகுமார் (வயது 35). பிரபல ரவுடியான (Rowdy) இவர் மீது வில்லிவாக்கம், ஐசிஎப் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு வில்லிவாக்கம், கம்மவார் நாயுடு தெரு அருகே தனது நண்பர்களுடன் ரவுடி உதயகுமார் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் மர்ம கும்பல் (Mysterious Persons) வந்தனர். இதனை பார்த்ததும் உதயகுமாரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அந்த மர்ம கும்பல் உதயகுமாரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரி வெட்டித் தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலமாக தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளார். Lava Yuva 5G: லாவா யுவா 5ஜி ஸ்மார்ட் போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு..! விரைவில் அறிமுகம்..!

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர் உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, வில்லிவாக்கம் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், நியூ ஆவடி சாலை அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு, வில்லிவாக்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி டபுள் ரஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ரவுடி உதயகுமார் முதல் குற்றவாளியாக இருந்தார். தற்போது, சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நிலையில், டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் மர்ம கும்பல், உதயகுமாரை கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.