YouTuber Divya Kallachi: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் அதிரடி கைது..!

விருதுநகரில் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக யூடியூபர் திவ்யா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

YouTuber Divya Kallachi: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் அதிரடி கைது..!
YouTuber Divya (Photo Credit: @NewsTamilTV24x7 X)

ஜனவரி 29, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur) பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆபாச யூடியூபர் திவ்யா (YouTuber Divya) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சித்ரா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திவ்யா கள்ளச்சி (Divya Kallachi) என்ற யூடியூபர் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். Human Feces In Classroom: பள்ளி வகுப்பறையில் மனித மலம்.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!

சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல்:

இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, ஒரு யூடியூபர் ஆவார். இவரும், இவரது நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அத்திகுளம் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளனர். இதில், கார்த்தி என்பவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சித்ராவின் நண்பராக உள்ளார். இதனால் நிறுவனத்தின் தலைவரான சித்ரா, திவ்யா மற்றும் அங்குள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி கார்த்தியிடம் கூறியுள்ளார்.

பணம் பறிக்க முயற்சி:

இதன்பேரில், கார்த்தி தனது நண்பரான ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மூலம் திவ்யா மற்றும் 2 சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு திவ்யாவிடம், சித்ரா பணம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சித்ரா என்பவர் தான், திவ்யாவிடம் பணம் பறிப்பதற்காக இவ்வாறு வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பது தெரியவந்தது.

யூடியூபர் கைது:

இதனையடுத்து, சிறுவர்களின் ஆபாச வீடியோ எடுத்த ஆனந்த், கார்த்தி, சித்ரா மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திவ்யா ஆகிய 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ (Pocso Act) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

 

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).