Human Feces In Classroom: பள்ளி வகுப்பறையில் மனித மலம்.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!
திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் மனித மலத்தை வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 29, பல்லடம் (Tirupur News): திருப்பூர் மாவட்டம், பல்லடம் (Palladam) அருகே காமநாயக்கன்பாளையம் (KamanaickenPalayam) பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 300 பேர் பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல பள்ளி செயல்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜனவரி 29) காலை பள்ளியை திறந்து பார்க்கும் போது, 10ஆம் வகுப்பு வகுப்பறையில் மனித மலம் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேசை, ஜன்னல், சுவர் உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் மனித மலத்தை வீசி சென்றுள்ளனர். Crime News: சக தோழியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற மாணவி.. மூடி மறைத்த பள்ளி நிர்வாகம் மீது வழக்கு..!
பள்ளி வகுப்பறையில் மனித மலம்:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பள்ளி வகுப்பறையில் மனித மலம் வீசப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வகுப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வீடியோ இதோ:
பல்லடத்தில் அரசு பள்ளிக்குள் மனித மலம் வீச்சு pic.twitter.com/1GGFfDpAK6
— kalyanvarma976 (@kalyanvarm99877) January 29, 2025
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

