வானிலை: வாட்டி எடுக்கபோகும் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இன்று முதல் வரும் 17 ம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலேயே நிலவும் எனவும், 2 நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 11, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக 34.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. Vadapalani Murugan Temple: அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.. மணிக்கணக்கில் வடபழனி முருகனை நோக்கி காத்திருக்கும் பக்தர்கள்.!
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், 11-02-2025 மற்றும் 12-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 13-02-2025 முதல் 17-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
இன்று (11-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (12-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22” செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

