
பிப்ரவரி 11, வடபழனி (Chennai News): சென்னையில் உள்ள வடபழனி (Vadapalani Murugan Temple) முருகன் கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புராதன கோவில் ஆகும். இக்கோவிலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். ஆதலால், வார இறுதி விடுமுறை நாட்களில் பெரும்பாலும் வடபழனி முருகன் கோவிலில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், தைப்பூசம் 2025 பண்டிகையை முன்னிட்டு, இன்று திரளாக முருக வடபழனியில் திரண்டனர். Vadalur Jothi Dharisanam: ஜோதியாக காட்சி தந்த வள்ளலார்; பயபக்தியுடன் தரிசனம் செய்த பக்தர்கள்.. வடலூர் தைப்பூசம் 2025.!
அதிகாரிகள் திணறல்:
பால் குடம், காவடி என நேர்த்திக்கடன் எடுப்போர், தரிசனம் செய்ய மட்டும் என முருக பக்தர்கள் இன்று அதிகளவில் குவிந்ததால் வடபழனி ஆற்காடு சாலை, 100 அடி சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. வடபழனி கோவிலில் இருந்து 4 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். காலையிலேயே நடை திறக்கப்பட்டாலும், அதிகாலை முதலாக பக்தர்கள் குவிந்த காரணத்தால், காவல்துறையினரும் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் திணறிப்போயினர்.
பயபக்தியுடன் சுவாமி தரிசனம்:
நேர்த்திக்கடன் எடுத்து வருவோர், பொதுதரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனி வழிகள் வைக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நேரத்திற்க்கு 100 பக்தர்கள் வீதமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் சூழல் உண்டாகியது. சில இடங்களில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இன்று தைப்பூசம், வடபழனியில் திரண்ட மக்கள் கூட்டம்:
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🚩
அலையென திரண்ட முருக பக்தர்கள்
வடபழனி சென்னை. pic.twitter.com/LG8fJLBLkm
— சுரேஷ் காங்கேயன் (@SureshKangayan) February 11, 2025
வடபழனியில் தைப்பூசம் (Vadapalani Murugan Temple Thaipusam 2025) கொண்டாட்டம்:
தலைவன பார்த்தாச்சு..!! 😊🙏 #தைப்பூசம் #Thaipusam https://t.co/9wu2me1XG5 pic.twitter.com/AwK6MQdpNP
— MSK (@sendil9Oskid) February 11, 2025
தைப்பூசம் கூட்டநெரிசல் காரணமாக பொதுதரிசனம், கட்டண தரிசனம் என வைத்திருந்த நிலையில், வரிசை மாறி சென்றவர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் கறார் வசூலில் ஈடுபட்டதாக புகார்:
@CMOTamilnadu @PKSekarbabu தைப்பூச நாளில் வடபழனி முருகன் கோவிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.பொது தரிசனம் சிறப்பு தரிசனம் வரிசை தெரியாமல் கோவில் உள் சென்ற பிறகு,கட்டணம் இருந்தால் செல் அல்லது வெளியே வந்து விடுங்கள் என்கின்றனர். pic.twitter.com/Kx71O0x4c6
— Tamilarasan (@tamil_r7) February 11, 2025