Gold Rate Today: ரெக்கார்ட் பிரேக் செய்த வெள்ளி விலை.. தங்கம் விலையும் புதிய உச்சம்.. ஷாக் நிலவரம்.!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: ரெக்கார்ட் பிரேக் செய்த வெள்ளி விலை.. தங்கம் விலையும் புதிய உச்சம்.. ஷாக் நிலவரம்.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 23, சென்னை (Gold Price Today): தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும்.

தங்கம் விலை உச்சம் :

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ.81,000 கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை ரூ.85,000ஐ நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. Navaratri Festival 2025: நவராத்திரி பண்டிகை 2025: ஒன்பது நாட்கள் வழிபாடுகளும், சிறப்புகளும்..! 

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.84,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,49,000க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).