Gold Rate Today: ரூ.82,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.81,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை (Gold Rate Today in Chennai) உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: ரூ.82,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!
Gold Rate Today in Chennai (Photo Credit: Team LatestLY)

செப்டம்பர் 12, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.! 

தங்கம் விலை உயர்வு:

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை இரண்டு நாட்களாக மாறாமல் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. PMK Ramadoss Vs Anbumani: அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்தை சுட்டிக்காட்டி கே. பாலு பரபரப்பு பேட்டி.! 

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், கிலோ ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,42,000க்கு விற்பனையாகிறது. தங்கம் கிடுகிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த நிலையில் வெள்ளியும் உயர்ந்து வருகிறது. விரைவில் வெள்ளியின் விலையை தங்கம் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).