Gold Price: ஒரேநாளில் இரண்டாவது முறையாக கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு பேரிடி.!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 13, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) :
மே 13ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை காலை, தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,765க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஒரே நாளில் இரண்டாவது முறையாக இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கத்தில் விலை :
காலை நேர விற்பனையை காட்டிலும் இன்று மாலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலையானது கிட்டத்தட்ட ரூ.840 உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 13, 2025 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

