Breaking: ரூ.10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. மாதத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.77,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Breaking: ரூ.10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. மாதத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 01, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தங்கம் விலை அதிரடி உயர்வு :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.76,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 01ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Madurai: '150 சவரன் போதாது., 300 சவரன் வேணும்'.. வரதட்சணை கேட்டு தினமும் டார்ச்சர்.. இளம்பெண் தற்கொலை.!

உச்சம் தொட்ட தங்கம் :

கடந்த மாதம் ஆகஸ்ட் 29 காலை 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,470 க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல ஒரு கிராம் தங்கம் ரூ.9,535 க்கு விற்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 30 சனிக்கிழமை 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,620 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.76,960 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :

இந்த நிலையில் இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,705 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,36,000 க்கு விற்பனையாகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்குவது தங்கப்பிரியர்களுக்கு பேரிடியாகி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).