Madurai Dowry Suicide Death Case (Photo Credit: @Sunnewstamil X)

ஆகஸ்ட் 01, மதுரை (Madurai News Today): தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்க்கும் சோகம் அதிகம் நடந்து வந்தது. குறிப்பாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட பல நூறு சவரன் நகைகள் வரதட்சணை கொடுத்தும், அது போதாது என கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக தொழிலதிபரின் மகள்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் வரதட்சணை கொடுமை (Dowry Torture Suicide Death) காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து தமிழகத்தை மீண்டும் அதிர வைத்துள்ளது. இந்த விஷயம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வானிலை: விழுப்புரம், தென்காசி, கோவை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.! 

வரதட்சணை கேட்டு கொடுமை:

மதுரையைச் சேர்ந்த ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின்போது மணமகன் வீட்டார் சார்பில் வரதட்சணையாக சுமார் 300 பவுன் நகைகளை கேட்டுள்ளனர். பெண் வீட்டார் தரப்பில் 150 பவுன் நகை கொடுத்த நிலையில், மீதமுள்ள 150 பவுன் தர வேண்டும் என மணமகன் வீட்டார் பிரியதர்ஷினியை எப்போதும் கொடுமை செய்து வந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிரியதர்ஷினி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பிரியதர்ஷினியை குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பேரில் காவல்துறையினர் பெண்ணின் கணவர் ரூபன்ராஜ், அவரது தந்தை இலங்கேஸ்வரன் மற்றும் தாய் தனபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு வற்புறுத்தி நடக்கும் சோகங்கள் தொடர்வது தமிழக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.! 

Death Suicide (Photo Credit: Pixabay)
Death Suicide (Photo Credit: Pixabay)

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3