Gold Rate Today: இன்றைய தங்கம் விலை அதிரடி குறைவு.. விவரம் உள்ளே.!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் 20, சென்னை (Gold Price Today): ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) இன்று சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது.
ரூ.75,000ஐ நெருங்கும் தங்கத்தின் விலை (Gold Rate Today):
சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 13 ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000ஐ கடந்தது. Operation Sindhu: ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் சிந்து'.. மாணவர்கள் மகிழ்ச்சி.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று (ஜூன் 20) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,210க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி (Silver) விலை ரூ.2000 குறைந்து ரூ.1,20,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

