Operation Sindhu (Photo Credit: Facebook)

ஜூன் 19, புதுடெல்லி (New Delhi News): இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போரில் (Israel Palestine War), பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் குழுவுக்கு ஈரான் தொடக்கத்திலிருந்து வெளிப்படையான ஆதரவு தெரிவித்து நிதி மற்றும் பொருள் உதவி வழங்கிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் ஈரானில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான செயல்களையும் முன்னெடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இன்றுவரை பாலஸ்தீனியம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து வேட்டையாடி வருகிறது. இந்த போரின் தீவிரம் ஹமாஸ் குழுவினருக்கு உதவி செய்த ஈரான், லெபனான் போன்ற நாடுகளின் மீதும் திரும்பி இருக்கிறது. இதனால் அந்த நாட்டுக்கு எதிராகவும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேல் தன்னிச்சையாக ஈரானுக்குள் புகுந்து முக்கிய நகரங்களை குறி வைத்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. Israel Iran War: ஈரானுக்கு மரண அடி? இஸ்ரேலுடன் கைகோர்க்கும் அமெரிக்கா? நடக்கப்போவது என்ன.. 

முற்றும் மோதல், வெளியேறும் வெளிநாட்டவர்கள்:

இந்த சம்பவத்தால் ஈரானும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்ற சூழல் அதிகரித்தது. இதனால் அங்குள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்பவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இந்தியா ஆபரேஷன் சிந்துவை (Operation Sidhu Begins) தொடங்கி இருக்கிறது. இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு (Govt of India) நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜூன் 17ஆம் தேதி ஈரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டு வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் இன்று காலையில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். மேலும், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ள காரணத்தால், இந்திய தூதரகத்துடன் இணைந்து இருக்குமாறு அதிகாரிகளின் ஆலோசனைக் ஏற்ப செயல்படுமாறும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

.

ஈரானில் இருந்து மீண்டு வந்தது தொடர்பாக மாணவி அளிக்கும் பேட்டி:

தங்களை பத்திரமாக மீட்டு வந்த இந்திய தூதரக (Indian Embassy Officials) அதிகாரிகளுக்கு நன்றி சொல்லும் மாணவர்: