Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 16, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு.. 120 காலிப்பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க.! 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை மூன்று நாட்களாக மாறாமல் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,44,000க்கு விற்பனையாகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).