Reserve Bank of India (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 15, புதுடெல்லி (New Delhi): மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருக்கும் 120 அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக தகுந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி காலிப் பணியிடங்கள் விபரம் பின்வருமாறு, Google Gemini AI Saree Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. ரெட்ரோ ஸ்டைல் முதல் வின்டேஜ் வரை.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.! 

பணி குறித்த விபரம் :

  • அதிகாரி (ஜெனரல்) - 83
  • அதிகாரி (எக்கானமி மற்றும் பாலிசி துறை) - 17
  • அதிகாரி ஸ்டாடிஸ்டிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட் - 20
  • வயதுவரம்பு - 21 முதல் 30 வரை எம்.பில் மற்றும் பி.எச்.டி முடித்தவர்களுக்கு அதிகப்படியாக 34 வயது வரை தளர்வு இருக்கிறது
  • கல்வித் தகுதி - பட்டப்படிப்பு முடித்துள்ள நபர்கள் 60 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50% மதிப்பெண், முதுகலை படித்தவர்களுக்கு 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  • மாத சம்பளம் - ரூ.55,200 முதல் 99,750 வரை
  • தேர்வு செய்யப்படும் முறை - மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். முதன்மை, முதல்நிலை, நேர்முகத் தேர்வு
  • விண்ணப்பிக்கும் முறை - விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் ஆர்பிஐயின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://rbi.org.in/அல்லது https://ibpsreg.ibps.in/rbioaug25/ சென்று விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்ப கட்டணம் - ரூ.850 கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
  • விண்ணப்பிக்க இறுதி நாள் - செப்டம்பர் 30 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
  • தேர்வுகள் நடைபெறும் தேதி - அக்டோபர் 18 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறுகிறது

விண்ணப்பம் குறித்த அறிவிப்பினை பார்க்க : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4713