Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சமீபகாலமாக உயர்ந்து வந்த நிலையில், தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி தற்போது உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 25, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வானிலை: மழை இல்லையாம்., கொளுத்தப்போகும் வெயில்.. தொடரும் வானிலை மாற்றம்.. மக்களே கவனம்.!

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை:

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,305 க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,31,000 க்கு விற்பனையாகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 25, 2025 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).