Summer Weather Report (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. அடுத்த 48 மணி நேரத்தில்‌ ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால்‌ உள்ள வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்‌கூடும்‌. Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.! 

இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):

மேற்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வெப்பநிலை எச்சரிக்கை :

இன்று 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில்‌ 2-3 செல்சியஸ்‌ வரை படிப்படியாக உயரக்கூடும்‌. இதனால் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னை வானிலை (Chennai Weather) :

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் வானிலையை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகமும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.