Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

சென்னையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ள நிலையில், சவரனுக்கு ரூ.77,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாளுக்குநாள் உயரும் தங்கம் விலை :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.76,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 02ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.! 

தங்கம், வெள்ளி கிடுகிடு உயர்வு :

நேற்று தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,705 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல தங்கத்திற்கு ஈடாக வெள்ளியும் உயர்ந்தது. நேற்று வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,36,000 க்கு விற்கப்பட்டது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :

இந்த நிலையில் இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,725 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000 க்கு விற்பனையாகிறது. இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).