Breaking: ஒரே நாளில் 2 முறை போக்கு காட்டிய தங்கம்.. மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு.. ஷாக் நிலவரம்.!
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சரிந்த நிலையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
செப்டம்பர் 08, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரிந்த வேகத்தில் உயர்ந்த தங்கம் :
தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 08ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலையானது குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. Nanjil Vijayan: 'பாலியல் ரீதியாக பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார்' - நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்.!
இன்று காலை தங்கத்தின் விலை:
இன்று (செப்டம்பர் 08) காலை 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,970 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், ரூ.1000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000க்கு விற்பனையானது.
இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000க்கு விற்பனையாகிறது. இன்று காலை தங்கத்தின் விலை சரிந்த நிலையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 08, 2025 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

