Transgender Actress Files Case on Nanjil Vijayan (Photo Credit : Instagram / Youtube)

செப்டம்பர் 08, சென்னை (Cinema News): மொட்ட சிவா கெட்ட சிவா உட்பட பல தமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திருநங்கை நடிகை ஒருவர் விஜய் தொலைக்காட்சியின் மூலமாக பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வில்லிவாக்கத்தை சேர்ந்த நடிகை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பான அவரின் புகாரில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும், நாஞ்சில் விஜயனும் பழகி வந்தோம். அவர் திருமணத்திற்கு முன்னதாகவே என்னுடன் பழகி பின் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதமாக என் செல்போன் எண்ணை பிளாக் செய்து என்னுடன் பேச மறுக்கிறார். அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி தற்போது கைவிட்டு செல்ல முயற்சிக்கிறார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். Joy Crizildaa: 'தர்மம் ஜெயிக்கும்' ஜாய் கிரிசில்டா பதிவு.. முற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பஞ்சாயத்து.! 

நாஞ்சில் விஜயன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக திருநங்கை நடிகை புகார் :

இந்த புகாரின் பேரில் தற்போது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், நாஞ்சில் விஜயன் தரப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, புகாரளித்துள்ள பெண் எனக்கு யார் என்று தெரியாது என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலக்கப்போவது யாரு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாஞ்சில் விஜயின் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து பல படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். இதனிடையே தற்போது அவரின் மீதான குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.