TN Assembly 2025: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2025.. அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!
சட்டப்பேரவைக்கு வந்த சில நிமிடங்களிலேயே வெளியேறி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஜனவரி 06, சென்னை (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 (TN Assembly) இன்று முதல் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பட்ட நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (Governor R. N. Ravi) சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தார். ஆளுநர் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிக்கப்படும். ஆனால் இன்று தேசிய கீதம் ஒலிக்கப்படாததையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறினார். Minor Girl Sexual Abuse: வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய ஓட்டுநர் போக்சோவில் கைது..!
தேசிய கீதம் அவமதிப்பு:
தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்கம்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

