ஜனவரி 06, பெரம்பூர் (Chennai News): சென்னை, பெரம்பூரில் (Perambur) உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 38 பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 18 வயது மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் (ஜனவரி 04) 2வது மகளான 13 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், காலை 11 மணியளவில் இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பார்க்க இளையராஜா என்பவர் வந்துள்ளார். வானிலை: மக்களே ரெடியா! தொடரும் வடகிழக்கு பருவமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை:
அப்போது, தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமியிடம், தவறாக பேசி சிறுமியின் வீட்டில் உள்ளே யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு, சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அங்கிருந்து துரத்தி அடித்துள்ளனர். மேலும், சிறுமியின் தாய் லட்சுமிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனையடுத்து, லட்சுமி வீட்டிற்கு வந்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 4வது தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 49) என்பவரை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.
ஓட்டுநர் கைது:
மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனியார் கம்பெனியில் மேலாளர் ஒருவருக்கு கார் ஓட்டுநராக (Car Driver) வேலை செய்து வந்ததும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ள நிலையில், சம்பவ நாளன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதன் பின்னர், இளையராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.