Job Alert: சவூதி அரேபியாவில் டிரைலர் டிரைவர், போர்க்ளிப்ட் ஆபரேட்டர் தேவை; நல்ல சம்பளம்.. விபரம் உள்ளே.!
மாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை சம்பளம் பெறக்கூடிய அரேபிய நாட்டு பணிகளுக்கான நேர்காணல் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
நவம்பர் 14, தூத்துக்குடி (Thoothukudi News): நான் முதல்வன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டமானது, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு மாவட்ட மற்றும் வெளிநாடு அளவிலான வேலைவாய்ப்பு தேவைகளும், அரசின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக வேலைகளுக்கு வெளிநாடு செல்வோர், பணத்தை செலுத்தி ஏமாறும் வாய்ப்புகள் குறைக்கும் முயற்சியாக, அரசு தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வெளிநாடுகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான தகவலை தெரியப்படுத்தி வருகிறது. Job Alert: திருப்பத்தூர் இளைஞர்களே ரெடியா.. மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.!
ட்ரைவர், ஆபரேட்டர் தேவை:
அந்த வகையில், சவூதி அரேபியாவில் துறைமுகத்தில் பணியாற்ற ட்ரெய்லர் டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான சம்பளமாக 1975 ஏஇடி பணம் வழங்கப்படும் (45000 இந்திய மதிப்பில்). இது தவிர கூடுதல் பணி நேரம் மற்றும் தங்குமிட வசதியும் உண்டு. இதற்கான தகுதியாக வயது 23 முதல் 42 வரை, ஓரளவு ஆங்கிலம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல, போர்க்லிப்ட் லைட் மற்றும் ஹெவி ஆபரேட்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான வயது குறைந்தபட்சம் 23 முதல் 42 வரை. சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.45000 முதல் ரூ.54000 வரை கிடைக்கும்.
நேர்காணல் தூத்துக்குடியில் வைத்து நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 9626782706 / 7540084429.
போர்க்ளிப்ட் ஆபரேட்டர் வேலைக்கு நேர்காணல் குறித்த அறிவிப்பு:
WE ARE HIRING
Forklift Operator (Light & Heavy) @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @naan_mudhalvan #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu #Vacancy #jobopening pic.twitter.com/j2NlEVylgh
— TN DIPR (@TNDIPRNEWS) November 13, 2024
(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

