Job Alert: திருப்பத்தூர் இளைஞர்களே ரெடியா.. மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.!
மாவட்ட அளவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. வரும் நவ.16 அன்று திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14, ஆட்சியர் அலுவலகம் (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 16.11.2024 அன்று, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாமானது நடைபெறுகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருப்பத்தூர் - தர்மபுரி சாலையில் உள்ள விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதன் சிறப்பு அம்சங்களாக 100-க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் சார்பில், வேலைவாய்ப்பு வழங்கப்படும். Man Stabs Dcotor: அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; உயிருக்கு போராடும் சோகம்.. போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள் சங்கம்.!
வேலைவாய்ப்பு & சுயதொழில் ஆலோசனை:
மேலும், 5000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இதன் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில், வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்யப்படும். மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சுயதொழில் வழிகாட்டுதல்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
கல்வித் தகுதிகள் & விபரங்களுக்கு:
எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்புகள் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை 04179 222033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தனியார் வேலை வாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

