Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு; ரூ.57 ஆயிரத்தை கடந்தது.!

வெள்ளியின் விலை சில நாட்களாகவே மாறாமல் இருக்கும் நிலையில், தங்கத்தின் விலையானது ஏற்ற-இரக்கத்தை சந்தித்து வருகிறது.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு; ரூ.57 ஆயிரத்தை கடந்தது.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 09, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Chennai Accident: தோழியுடன் சைக்கிளில் சென்ற மாணவி மீது பேருந்து மோதி பயங்கரம்; ஒருவர் பலி., சென்னையில் சோகம்.! 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:

தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (Gold Silver Price Today in Chennai):

இந்நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7,130 க்கும், சவரன் ரூ.57,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.100 க்கும், கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000 க்கும் விற்பனை செய்ய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).