Parents Killed Their Son: குடிபோதையில் தகராறு செய்த மகன்; உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்..!

விருதுநகரில் குடிபோதையில் தகராறு செய்த வந்த மகனை, அவரது பெற்றோர் வீட்டில் இருந்த உலக்கையால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Parents Killed Their Son: குடிபோதையில் தகராறு செய்த மகன்; உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்..!
Crime Murder (Photo Credit: Pixabay)

ஜூன் 13, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி, அண்ணா நகர் தெற்கு வீதியை சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன் (வயது 48)-பேச்சியம்மாள் (வயது 40). இத்தம்பதிக்கு மகள் முத்துமாரி, மகன் அய்யனார் (வயது 20). மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் அய்யானருக்கு குடிப்பழக்கம் (Drunken Man) இருந்துள்ளது. இதனால், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை, அவரது சித்தப்பா கண்டித்துள்ளார். Boy Who Played Pubg Dies: பப்ஜி விளையாட்டு மோகம்; கேம் விளையாடியபடி குழியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.. பிறந்தநாளை கொண்டாட சென்றபோது நேர்ந்த சோகம்..!

இதில், ஆத்திரமடைந்த அவர் சித்தப்பாவை அடித்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், கடும் கோபமுற்ற அவரது தந்தை வீட்டில் இருந்த விறகு கட்டையால் அய்யானரை தாக்கியுள்ளார். பதிலுக்கு தாக்க வந்த அய்யானரை அவரது தாயார் அருகில் இருந்த உலக்கையால் பலமாக தலையில் அடித்துள்ளார். இதில், மயக்கமடைந்து அவர் கீழே விழுந்தார். இவர், வழக்கம்போல மதுபோதையில் கிடப்பதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் உறங்க சென்றுள்ளனர்.

பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, தனது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, ஆலங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரது பெற்றோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).