ஜூன் 13, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த புல்கித் ராஜ் ஷாதாத்புரி (வயது 16) என்ற சிறுவன் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது, குடும்பத்தினரின் கண்ணில் படாமல் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சென்று, தனது நண்பர்களுடன் அருகில் உள்ள அம்பாசாரி ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து வைக்க விரும்பினார். அவர்கள் அனைவரும் அம்பாசாரி ஏரியில் நீண்ட நேரமாக இருந்தனர். பிறகு, அந்த இடத்தில் நடந்துகொண்டே பப்ஜி கேம்களை (PUBG Game) விளையாட ஆரம்பித்தனர். WI Vs NZ Highlights: வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி; நியூசிலாந்து அணி தோல்வி..!
இந்த சமயத்தில் புல்கித், பப்ஜி விளையாடுவதில் மூழ்கியிருந்ததால், அவரது கவனம் விளையாடுவதில் அதிகமாக இருந்தது. இதனால், அவர் அங்கிருந்த 15 அடி குழியில் விழுந்தார். கீழே விழுந்த புல்கித் வலி தாங்க முடியாமல் அலறி கத்தியுள்ளார். அவருடன் இருந்த ரிஷிகேஷ் திரும்பிப் பார்த்த போது, புல்கிட் உள்ளே குழியில் விழுந்திருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரிஷிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் புல்கித்தின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்தும் குழியில் விழுந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. பின்னர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில், விரைந்து வந்த நாக்பூர் காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் புல்கித்தின் உடலை வெளியே எடுத்தனர். உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பப்ஜி கேம் விளையாடும் போது, சிறுவனின் கவனக்குறைவால் 15 அடி குழியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.