Wife Arrested For Beating Husband: கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவி; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய மனைவி, மாமியார் கைது..!
கள்ளக்குறிச்சியில் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கண்டித்த கணவரை அடித்து தாக்கிய மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 02, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தொழுவந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவருக்கும், அத்தியூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுகந்தி (வயது 30) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். A Person Raising Squirrels In A Grocery Store: மளிகை கடையில் அணில் வளர்த்து வரும் நபர்; 90 அணில்கள் வளர்த்து ஆச்சரியமூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்..!
இந்நிலையில், சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு (Forgery) இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பிரபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பிறகு, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுகந்தி, மாமனார் செல்வம் (வயது 55), மாமியார் சுமதி (வயது 48), மைத்துனர் அறிவழகன் (வயது 23) ஆகிய 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பிரபுவை அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரபுவின் தம்பி விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், சுகந்தி உட்பட 4 பேர் மீது வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுகந்தி மற்றும் சுமதி ஆகியோர் இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

