ஜூலை 02, மதுரை (Madurai News): பொதுவாக வீடுகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து கொஞ்சி மகிழ்வர். அதற்கு உணவு பரிமாறி அதனுடன் நேரம் செலவழித்து விளையாடி மகிழ்ந்து வருவது வழக்கம். ஆனால், மதுரையை சேர்ந்த மளிகை கடைக்காரர் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளாக அணில் (Squirrel) வளர்த்து வருகிறார். Grocer Beat The Customer To Death: தனது கடையில் பொருட்களை வாங்காததால் மளிகை கடைக்காரர் ஆத்திரம்; வாடிக்கையாளரை அடித்துக் கொன்ற சம்பவம்..!
இதுபற்றி அவர் கூறுகையில், 'கடந்த 2019-ஆம் ஆண்டு மரத்தில் இருந்து விழுந்த அணில் ஒன்றை எடுத்து வளர்த்தேன். அதிலிருந்து சுமார் 90 அணில்களை எடுத்து வளர்த்திருப்பேன். அதன் குட்டிகள் 150-க்கும் அதிகமாக இருக்கும். அணில்கள் இல்லாமல் தற்போது என்னால் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு நெருக்கமாகிவிட்டது. முகம் தெரியாத நபர்கள் கூட வெளியில் அடிபட்டு கிடக்கும் அணிலை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விடுவர். அணில் மட்டுமில்லாமல் காக்கா, குருவி, கொக்கு, கிளி, புறா ஆகியவற்றையும் வளர்த்து வெளியில் விட்டுவிடுவேன் என நெகிழ்ச்சியோடு கூறினார். மேலும், அதற்கு அழகான பெயரும் உண்டு. "டிச்சு" அப்டினு சொன்னா போதும், ஓடி வந்துரும். எந்நேரமும் என்மேல தான் இருக்கும். இந்த அணில் என்கிட்ட இருந்த அளவுக்கு வேற எந்த அணிலும் எந்த இருந்தது இல்லை' என அவர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
நன்றி. பாலிமர் டிவி