Husband Arrested For Killing Wife: மனைவியை கொன்றுவிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு; கணவரை கைது செய்த காவல்துறையினர்..!
சென்னையில் தனது மனைவியை கொன்றுவிட்டு, அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறிய கணவர் காவல்துறையினர் விசாரணையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 30, சென்னை (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாழம்பூர் அடுத்துள்ள பொன்மார் ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (வயது 35). இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த வைசாலி (வயது 33) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். விமல்ராஜ் பொன்மாரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக இருந்து வந்துள்ளார். ATM Card Theft And Cash Fraud: ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் - மோசடி வழக்கில் கைது..!
இந்நிலையில், இவர்கள் இருவரும் பொன்மாரி மலை தெருவில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர், தனது மனைவி வைசாலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் வைசாலியை இவர் அடித்து உதைத்து, கழுத்தை நெரித்து கொலை (Murder By Strangulation) செய்துள்ளார். தனது மனைவியின் வீட்டிற்கு சந்தேகம் ஏற்படாதவாறு, வைசாலி மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர், ஒட்டியம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு தனது மனைவியின் உடலை கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மனைவியின் உறவினர்கள் மும்பையில் இருந்து வர வேண்டும் என்பதால், அடக்கம் செய்வதில் தாமதம் நிலவியது. இதனையடுத்து, நேற்று மதியம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, தாழம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வைசாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக, விசாரித்ததில் விமல் ராஜ் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

