ஏப்ரல் 30, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்வேந்தன் (வயது 32). இவர், சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். புகாரில், 'தனது வாங்கி ஏ.டி.எம். கார்டு தொலைந்துவிட்டது. இருப்பினும் அதிலிருந்து, 11,870 ரூபாய் பணத்தை 3 தவணையாக ஏ.டி.எம். கார்டு (ATM Card) மூலமாக திருடியுள்ளனர். மேலும், மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் தெரிவித்துள்ளார். Car-Cargo Truck Accident: சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; காரில் பயணித்த 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்..!
இதுகுறித்து, சூளைமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஸ்ரீவாசலு ரெட்டி (வயது 27) என்பவரை கைது செய்து விசாரித்ததில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரான இவர் முன்னாள் வங்கி ஊழியராக பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இவரிடமிருந்து 64 ஏ.டி.எம். கார்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஏ.டி.எம். மையங்களில் யாரேனும் தங்களது ஏ.டி.எம். கார்டை மறந்து விட்டு சென்றால் அவற்றை கைப்பற்றி, ஸ்வைபிங் எந்திரம் மூலம் பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீவாசலு ரெட்டி என்பவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.